யாழில் நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபர் கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக 24ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here