பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் மீது இருநூறு மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அர்ஜுனா பேசிய விடயங்களாவன.

அர்ஜுனாவால் பாதிக்கப்படவுள்ள பனை அபிவிருத்தி சபையின் ஊழியர்கள் மற்றும் பனை அபிவிருத்தி சபையின் எதிர்கால விடயங்கள்,

திக்கம் வடிசாலை தொடர்பான பிரச்சனை என்பன கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இல்லாவிடின் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவேண்டி ஏற்படும் என  பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் கூறியுள்ளார்.

(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here