கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றையதினம் (24.11.2024) யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றிருந்தார்.

நேற்று (24.11.2024) காலை யாழ்ப்பாணம் – ஜே – 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன், அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here