யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப்பகுதியில் நேற்று (24) இரவு ஒரு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பொலிஸார் இடைமறிந்த போது, உழவு இயந்திரம் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன் காரணமாக சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது கொடிகாமல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here