மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என கொலம்பிய தலைநகரங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான நேரலை தகவல்கள், வரைபடங்கள் மற்றும் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அவசர மீட்பு குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அந்நாட்டில் உள்ள கலி நகர மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு இடிந்து விழுந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இதனை தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மேற்கு கொலம்பியாவின் வளர்ச்சி குறைந்த பகுதியான சான் ஜோஸ் டெல் பாமர் (San José del Palmar) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தலைநகர் பொகோட்டாவில் இருந்து சுமார் 150 மைல்கள் மேற்கே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வு தலைநகர் பொகோட்டாவிலும் வலுவாக உணரப்பட்டது. அபாய ஒலிகள் ஒலித்தன, மக்கள் முன்னெச்சரிக்கையாக வீதிகளுக்கு வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here