யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (02) அதிகாலை 3.45 மணியளவில் குறித்த விபத்து கம்பஹாவில் இடம்பெற்றதுடன் மேலும் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பஸ் மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.







