நாற்பதுக்கும் மேற்பட்ட காட்சியறைகளில் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பெரியோர்கள் என அனைவருக்கும் ஏற்றவகையிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைசெய்யப்படவுள்ளன.
இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் வெளிவந்த புத்தகங்கள் பல்வேறு புத்தக விற்பனை நிறுவனங்களின் காட்சியறைகளில் விற்பனைசெய்யப்படவுள்ளன.
புத்தகங்களுக்கான விசேட விலைக்கழிவும் வழங்கப்படும்.
எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் இந்தப் புத்தகத்திருவிழாவில் கிடைக்கவுள்ளது.
புத்தகத் திருவிழா இடம்பெறும் மூன்று தினங்களும் மாலையில்,இசை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்வுகள்,நாடகங்கள் மற்றும் புத்தக அரங்க நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








