யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (12.05.2025) ஐஸ் கிறீம் தன்சல் வழங்கப்பட்டது.
பெளத்தர்களின் வெசாக் பூரணையை முன்னிட்டு மக்களுக்கு இலவசமாக இந்த ஐஸ்கிறீம் தன்சல் வழங்கப்பட்டது.


கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி SADDSP IP டிசாநாயக்க தலைமையில் நண்பகல் வேளை இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பதிகாரி S.I தினேஸ் அவர்களும் முறைப்பாட்டுப் பிரிவுப் பொறுப்பதிகாரி S.I.MB ரஜாவ் அவர்களும் மற்றும் கொடிகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மக்களுக்கான ஐஸ்கிறீம் தன்சலை சிறப்பான முறையில் வழங்கியிருந்தனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








