இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் நினைவேந்தலில் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]







