எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த போது நாட்டைக் கைப்பற்றுவதற்கு எந்தத் தலைவரும் முன்வரவில்லை எனவும் அந்த வேளையில் ரணில் விக்ரமசிங்க முன் வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது என்னுடைய தனிப்பட்ட முடிவு எனவும்  பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் முடிவு அல்ல என்றும்  நாட்டைப் பற்றி சிந்தித்து செயலாற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது ஆதரவை வழங்குகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here