நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டிற்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்லுவது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், சரியான நேரத்தில் அவர் தானே அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு எதிர்க்கட்சியை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், யுஎன்சியும் அதில் ஒத்துழைக்கின்றதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, யுஎன்சியின் ஆண்டு நிறைவு விழா இந்த மாதம் 20 அல்லது 21ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.








