ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பான குற்றவியல் வழக்கு விசாரணை தொடர்பில் அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும். நீதியை உறுதி செய்ய அரசாங்கம் சகல சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும்
லசந்த விக்கிரமசிங்கவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த காலத்தில் எங்கள் நிலைப்பாடு அதுதான். இன்றும் எங்கள் நிலைப்பாடு அதுதான். இந்த விடயத்தில் நீதி வழங்க நாங்கள் முடிந்த சகலதையும் செய்வோம் என்று நான் அவருக்கு உறுதியளிக்கிறேன். இது குறித்து ஜனாதிபதியுடனும் விரிவாக விவாதித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.







