மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் டெமெஸ்கல் கன்யானின் மலையேறும் பாதை உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பசிபிக் பாலிசேட்ஸை உருவாக்கும், உயரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அலங்கார வீடுகள் நகரத்தின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க விரும்பும் மலையேறுபவர்கள் அங்கு பசிபிக் பெருங்கடலின் நீரைத் தெளிவாக காணலாம்.

பள்ளத்தாக்கின் பச்சைப் போர்த்திய புதர்கள் இன்று சாம்பலாக மாறியுள்ளன. கண்ணுக்கெட்டிய தூரம் சாம்பல் மேடுகளாக உள்ளது. மலையேறும் பாதைகளை தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கும் பொலிஸாரின் மஞ்சள்நிற ரிப்பன்கள் தடுத்து நிற்கின்றன.

அந்தப் பகுதிகளில் பல வீடுகளை அழித்த பெருங்காட்டுத் தீ அங்கிருந்து தோன்றியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். நகரின் வடக்கே பல பகுதிகளிலும் இதுபோன்ற காட்சிகளையே காணமுடிகிறது. புலனாய்வாளர்கள் மலைகள் மற்றும் பாதைகளில் உள்ள பாறைகள், பாட்டில்கள், கேன்கள் போன்ற அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். என்றாலும், இந்தக் காட்டுத் தீயின் துவக்கம் இன்னும் பிடிபடவில்லை.

இந்தச் சூழ்நிலையில் அனைத்து லாஸ் ஏஞ்சல்ஸ்வாசிகளின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி ஒன்றுதான். அது, இந்தக் காட்டுத் தீ எங்கிருந்து தொடங்கியது? மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. என்றாலும், தீயால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த வாரத்தில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் வீசிய சாண்டா அனா காற்று தீயைப் பரப்பியது என தங்களுக்குள் காரணங்களைப் பேசித் தீர்க்கிறார்கள். இதனிடையே, சிலரின் விரல்கள், மலையேறுபவர்கள், மின் கோபுரங்களையும் சுட்டிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here