லிட்ரோ எரிவாயு நிறுவனம், எல் பி சிலிண்டர்களின் விலையை இன்று (5) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 100 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 42 குறைக்கப்பட்டு ரூ. 1,750 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேவேளை, 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 20 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








