திரப்பனை பகுதியில் இன்றைய தினம் (19) காலை 6.00 மணியளவில் லொரியுடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெகிராவையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வானில் 13 பேர் பயணித்திருந்த நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

1990 காவுவண்டி சேவையின் உதவியுடன், காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் திரப்பனை போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here