
வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிபகிஷ்கரிப்பு!
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (07) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள், நீதிமன்ற உத்தரவு இன்றி காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் குமாரவடிவேல் குருபரன், “இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான செயல். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடக்கு மாகாணத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று எந்த சட்டத்தரணியும் கடமைக்கு வரமாட்டார்கள்,” என தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.