ஹம்பந்தோட்டை – ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து தம்பதியினர் இருவரின் சடலங்கள் நேற்று (6) மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளன.

கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய கணவரும், அவரது மனைவியும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக, குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், கொலையின் காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று (7) நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து ஹங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here