பண்டாரவளை நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மாற்று திறனாளியான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 320 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளுடன் இன்று (6) காலை பண்டாரவளையில் கைதுசெய்யப்பட்டதாக பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில் தங்கியுள்ள வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரவளை நகரில் உள்ள இந்த வாடகை வீட்டில் சோதனை நடத்தியதுடன், சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளை சிறிய பொதிகளில் பொதி செய்து கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here