பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும், மற்றுமொரு நபருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்த தீர்ப்பை வழங்கினார்.
2008 ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு மூவரும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பணம் கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரால் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு நபர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபருக்கு கடுங்காவலுடன் கூடிய 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை, குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா கடுங்காவலுடன் கூடிய 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.








