வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியல் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று இரவு வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் உள்ள விழா மண்டபமொன்றில் நடந்த விருந்து ஒன்றினுள் புகுந்த துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர்  உயிரிழந்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் ஆனால் இலக்கு தவறி, அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here