நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை (NCM), இன்று (24) பாராளுமன்றத்தில் 116 வாக்குகள் பெரும்பான்மையில் தோல்வியடைந்தது.
மொத்தம் 152 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேணைக்கு எதிராக வாக்களித்தனர்.
36 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இந்த பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவந்திருந்தது.
கடந்த ஜூலை 22 அன்று, அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி முறைப்படி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளித்தது.
ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அந்த கலவரத்தில் பல சிறை அதிகாரிகளும் கைதிகளும் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சிறையில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நாணயக்கார நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதி அமைச்சரின் செயல்பாட்டை விமர்சித்ததுடன், அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரினர்.
இதேவேளை அரசாங்க உறுப்பினர்கள் நாணயக்காரவுக்கு பாதுகாத்து பேசினர். இந்த சம்பவத்திற்கு அமைச்சரை பொறுப்பாக்குவது நியாயமற்றது என்றும், அவருக்கு எதிராக NCM கொண்டுவருவதற்கான அடிப்படை என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.







