ஜனாதிபதி அலுவலகத்தில் செப்டம்பர் 16 அன்று தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் வங்கி, நிதி மற்றும் காப்புறுதி துறைகளுடன் வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பணிகளில் வங்கித் துறையின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வங்கி மற்றும் நிதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துதல், சிறிய மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்துதல், புதிய காப்புறுதி முறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகிய விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கருத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.






