இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிம (music licensing) தேவைகளை, அதன் உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் வரை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

பிறந்தநாள் விழாக்கள் உட்பட திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான உரிமம் தொடர வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவு, நவம்பரில் நடைபெறும் அதன் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ACPOSL தெரிவித்துள்ளது.

சங்கத்தின் கூற்றுப்படி, உரிம முறைமையில் நிரந்தர மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால், அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் தேவைப்படும் எனவும் அதன் இயக்குநர் குழுவால் சுயாதீனமாக அத்தகைய முடிவை எடுக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச உரிமை ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்வுகளில் நிகழ்ச்சி நடத்தும் DJக்களுக்கான உரிமத் தேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் உரிம கட்டமைப்பு, மண்டபங்கள் மற்றும் நிகழ்வுகளில் இசையை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு மட்டுமே பொருந்தும் என்றும், வீடுகளில் நடத்தப்படும் தனியார் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here