நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

குறித்த மானியத்துக்காக 4100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இந்த எரிபொருள் மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here