கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போராட்டம் அரை மணித்தியாலயங்கள் வரை முன்னெடுக்கப்பட்டன .
சர்வதேச நீதி தேவை ,ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே போன்ற கோசங்களையும் பதாகைகளையும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 2802 நாட்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது என எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்திருந்தார்.









