யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இன்று காலை 8:00 மணியளவில் இடம் பெற்றது.


முன்னாதாக காலை 5;00 மணியளவில் விசேட ஓம பூசைகள் இடம் பெற்று 6:30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்றதை தொடரந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் உள்வீதி வலம் வந்து 8:00 மணியளவில் பொங்கல் இடம் பெற்றது. இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டனர்.
[ரட்னசிங்கம் – முரளிதரன்]








