காலி, அம்பலாங்கொடை பிரதேசத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கச் சங்கிலிகள் மற்றும் பெண்டன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் படபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here