வவுனியா, நெளுக்குளம் – பாலாமைக்கல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றின் கிணற்றினுள் இன்று காலை (06.08)சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை சேர்ந்த ஆசிரியரான கிருஷன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








