வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் நேற்றையதினம்(11) குப்பை குழியை துப்பரவு செய்த போது அங்கு வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டுகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மடுகந்தை பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here