வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய 120ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக இவ்வருட 2025 ஆண்டுக்கான பழைய மாணவர்கள் விளையாட்டு விழா நேற்றைய தினம்(11.05.2025) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் அவர்கள் தலைமையிலும், விருந்தினராக சிதம்பரபுர பொலிஸ் நிலைய OIC நிரோசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பழைய அதிபர்கள், பழைய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ் விழாவினை பாடசாலையின் 2019(OL)2022(AL) மாணவர்கள் எடுத்து நடத்தியிருந்தனர்.

மேலும் இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக பழைய மாணவர்களுக்கான ஆண்களுக்கான கிரிக்கெட் மற்றும் பெண்களுக்கான எல்லே போட்டிகளும் நடைபெற்றன.

அதில் கிரிக்கெட்   போட்டியில் 2017 O/L அணி Champion  பட்டத்தையும்  2011O/L அணி  Runner up  பட்டத்தையும் சுவிகரித்துள்ளது…

பெண்களுக்கான எல்லே போட்டியில் 2006 O/L அணி Champion பட்டத்தையும் 2003 O/L அணி  Runner up பட்டத்தையும் சுவிகரித்துள்ளது.

அதன் பின் மாணவர்களுக்கு இனிமையூட்டும் முகமாக DJ இன்னிசை நிகழ்வுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

செய்தி தொகுப்பு:- டிலக்சிகா ரவிச்சந்திரன்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here