கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே முக்கிய கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தரப்பினரைப் போன்று எதிர்க்கட்சியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தி தனிக் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பது தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு தங்களது கட்சி தலைமை தாங்கும் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய சுயேட்சைக் குழுக்களுடன் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முக்கிய கலந்துரையாடல் ஒன்று இந்த வாரம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








