நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பேருந்துகள் செல்லவுள்ளன.

முதலாம் கட்ட பேருந்துகள் – ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேரூந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.18 மணிக்குச் செல்வதனை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், பிரதித் தேர்தல் ஆணையாளர் திரு இ சசீலன் அவர்களும், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன் அவர்களும், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களும் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் வாழ்த்தி வழி அனுப்பிவைத்தனர்.










