எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதிதபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, செப்டெம்பர் 8 வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான சிறப்பு நாளாகக் குறிப்பிடப்படும் எனவும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் வகிபாகம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் திகதிக்கு அமைவாக ஒகஸ்ட் 26ஆம் திகதி முதல் முறையாக வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தபால் வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 26ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், அனைத்து மாவட்ட பிராந்திய தபால் அதிபர்கள் மற்றும் மாகாண பிரதி தபால் அதிபர்கள் இணைந்து இதனை முன்னெடுப்பார்கள் எனவும் பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here