தேர்தல் காலங்களில் செயற்படுத்த முடியாத வாக்குறுதிகளை வழங்கி இன்று ஆளும் தரப்பிலுள்ள 159 உறுப்பினர்களும் பொய்காரர்களாகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

எல்லா அரசாங்கங்களும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்த பின்னரே அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதாகச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச,  இதற்குச் சிறந்த உதாரணம் தற்போதைய அரசாங்கம் ஆகும் எனவும் குறிப்பிட்டார்.

செய்ய முடியாத அனைத்து விடயங்கள் தொடர்பிலும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அவற்றை நிறைவேற்றுவதில்லை.

செய்ய முடியாத ஒன்றைச் செய்யப் போவதால் எதிர்பார்த்திராத பல பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

159 பேரும் தமக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிக் கொண்டு யாருக்கும் செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

மேலும் தேசிய கொள்கைகள் ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதன் ஊடாக செயற்பட்டால் நிதி திட்டமிடல்களைச் சிறப்பாகப் பேண முடியும்.

தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவொன்றை நியமியுங்கள் என யோசனை முன்மொழிந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனவே தேசிய கொள்கைகள் ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here