சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலொன்றில் வைத்து தாக்கி, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு நேபாள பிரஜைகளை வாதுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் வாதுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நேபாள நாட்டுப் பிரஜைகள் இருவரும் சீனப் பிரஜைகளுடன் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தாக்குதுலை மேற்கொண்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நேபாள பிரஜைகள் இருவரையும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here