கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்தக் கொலையுடன் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் வசிக்கும் 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here