தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஹங்குராங்கெத்தை வீதியில் குருதெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலாத்துஓயா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (11) கண்டெடுக்கப்பட்ட உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அவர் 50 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், பருத்த உடலமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (12) நடைபெறவுள்ளது.
மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








