சிம்புவுக்கும், பிரபல தெலுங்கு நடிகரின் மகளுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

சிம்புவுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது அவரின் பெற்றோரை மட்டும் அல்ல ரசிகர்களையும் கவலை அடைய செய்துள்ளது. உங்களின் தம்பி, தங்கைக்கு எல்லாம் திருமணமாகி குழந்தையே இருக்கிறது. நீங்கள் எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என ரசிகர்கள் கேட்டு வரும் நேரத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகரின் மகளுக்கும், சிம்புவுக்கும் விரைவில் திருமணம் என பேசப்படுகிறது. அந்த பெண் சிம்புவின் தீவிர ரசிகையாம். விஜய் தன் ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டது போன்று சிம்புவும் ரசிகையை மணக்கப் போகிறாராம் என பேசுகிறார்கள். ஆனால் இந்த தகவலை சிம்பு தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லை.

சிம்புவுக்கும், அவரின் ரசிகைக்கும் திருமணம் என டி. ராஜேந்தர் அறிவிக்கும் வரை இதை நம்ப முடியாது. ஏனென்றால் சிம்புவுக்கு திருமணம் என தகவல் வெளியாகியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. வரலட்சுமி சரத்குமாருக்கும், சிம்புவுக்கும் திருமணம் என தகவல் வெளியானதை யாரும் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அது வெறும் வதந்தி தான். வரலட்சுமிக்கு நிக்கோலய் சச்தேவுடன் ஜூலை மாதம் 2ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here