யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (மே 6) உறுதி செய்துள்ளது.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற குழு, தங்களை விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை விசாரித்து தள்ளுபடி செய்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதேவேளை ஏனைய இரண்டு பிரதிவாதிகளையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2015 மே மாதம் புங்குடுதீவில் 18 வயது மாணவியான வித்யா வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளுக்கு 2017 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.








