வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்டார்.
சுதந்திரப் போராட்டத் தலைவரும், வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின்னின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.








