‘விரிவான பொருளாதாரத்திற்கான பிராந்திய பங்காண்மை’ (RCEP) ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCEP, தென்கிழக்காசிய நாடுகள் (ASEAN) மற்றும் அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் கூடி அமுல்படுத்தப்படும் விரிவான வர்த்தக ஒப்பந்தமாகும்.

இந்நோக்கில், இலங்கை 2023 ஜூன் 28 ஆம் திகதியன்று விருப்பக்கோரல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், RCEP உட்பட்ட அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குகளை பூரணமாக பின்பற்ற தயாராக இருப்பதை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம், இலங்கைக்கு ஏற்றுமதி, சந்தைப் பண்முகப்படுத்தல், பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பங்கேற்பை வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். 2026 ஜனவரி 25 வரை நாட்டின் அடிப்படை வினாக்கொத்தை பூரணமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சரின் யோசனையை அமைச்சரவை அங்கீகரித்து, இலங்கையின் RCEP பங்கேற்புக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here