கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்துள்ளதால், அந்த பகுதியால் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வீதி அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் குறித்த பாறைகளால் சேதமடைந்துள்ளது.
இந்த பகுதி ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பதோடு போக்குவரத்து பாதிப்பு குறித்து தெளிவான அறிவிப்புகள் வெளியாகவில்லை.






