தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் (05.12.2024) வியாழக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர்.

வெள்ளம் நிறைந்துள்ள “கிழக்கு வெளி வயல்” நிலத்தில் இறங்கி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்.தென்மராட்சி கமநல சேவைகள் பிரிவுகளில் 5,820 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் , தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி 3,500 ஹெக்டயருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

  • யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here