பதுளை – தெல்பெத்த தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேருக்கு இன்றையதினம் (22) வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் அந்த வீடுகளின் சுவர்களில் விரிசல் மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு, மதில் ஒன்றும் இடிந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








