2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் 06 பேர் இன்று வெள்ளிக்கிழமை (3/21/2025) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

வெலிகம – ஹோட்டல் ஒன்றின்  அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 06 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புதன்கிழமை (19/03/2025) மாத்தறை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் ஏனைய சந்தேகநபர்கள் அறுவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here