எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.







