புத்தளம் – தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருதொகை வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (05.10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிகரட்டுகள் , விற்பனை செய்ய தயாராக இருந்த போது, சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 101 வெளிநாட்டு சிகரட் பெட்டிகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here