விசேட அதிரடிப்படை
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பில் பதற்றமான சூழ்நிலை!
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
"அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை...
உள்நாட்டுச்செய்திகள்
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்!
களுத்துறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எகொட உயன காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது. வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவினர் அவரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த...
உள்நாட்டுச்செய்திகள்
கிறிஸ்தவத் தேவாலயங்களில் விசேடப் பாதுகாப்புத் திட்டம்..!
உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்துக் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
பக்தர்கள் அதிக...
உள்நாட்டுச்செய்திகள்
கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது..!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த திருகோணமலை மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30/03/2025) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசிஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில்...
புதிய செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கமாண்டோ யோ – யோ என அழைக்கப்படும் நபரிடம் காவல்துறையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கெஹெல்பத்தர பத்மேவுக்கு அறிமுகப்படுத்தியவர் எனக் கூறப்படுகிறது.
இந்த சந்தேகநபர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...
உள்நாட்டுச்செய்திகள்
கேரள கஞ்சாவுடன் ஒருவர் மடக்கி பிடிப்பு..!
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நபர் ஒரு விசேட அதிரடிப்படையினரால் நேற்று (20.02.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து...
புதிய செய்திகள்
குருணாகலில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
குருணாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதெனிய பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி, கிங்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும்...
புதிய செய்திகள்
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து 40 வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிபென்ன பட்டேகொட, வலகெதர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 35 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்...
Hourly News
பூமிக்குள் புதைந்துள்ள மர்மம்; தேடுதல் வேட்டையில் அரசு!
வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம்பெற்ற போராட்டம்; எழுத்து மூலம் வாக்குறுதி கையளிப்பு…
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (20.11.2024) மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் இரு அரசியல் கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர்கள் இருவர்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


