வவுனியா பொதுவைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று நேற்றைய தினம்(16) இரவு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதில்  ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம்  நேற்றைய தினம் இரவு11மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகை தந்துள்ளது.

இதன்போது கடமையில் இருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான  காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here