பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் நேற்று (22.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18ஆம் திகதி குறித்த நபர், மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் குறித்த நபர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here